ஐயப்பனின் கால்களில் காணப்படுவது சாதாரண துணிகட்டு அல்ல:
அதன் பெயர் யோகப் பட்டம்:
ஐயப்பன் யோக நிலையில் இருப்பதால், அவர் காலில் கட்டப்பட்டுள்ள பட்டம் யோக பட்டம் எனப்படும். இதே மாதிரியான யோகப் பட்டத்தை, நீங்கள் யோக நரசிம்மர், யோக தட்சிணாமூர்த்தி போன்ற யோக நிலையில் அருளும் தெய்வ மூர்த்தங்களிலும் காணமுடியும். பகவான் சாஸ்தா இயற்கையாகவே யோகேஸ்வர ஸ்வரூபத்தில் உள்ளார். ஸ்கந்த புராணம் மற்றும் பத்மபுராணங்கள் சாஸ்தாவை யோகேஸ்வரன் என்கின்றன. அவரை வீரம், கம்பீரம் போன்ற கோலங்களில் அச்சங்கோயில், ஆரியங்காவு கோயில்களில் காணலாம். சபரிமலையில், யோக நிலையில் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் முகமாக உள்ளார். ஏனென்றால், அது மகா யோகபீடம் பகவான் அங்கே தவக்கோலத்தில் இருக்கிறார். அதனால்தான் யோகப்பட்டம் அவர் காலில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலை ஹரிவராசனம் எனப்படும். அதாவது இரண்டு கால்களும் பின்புறமும் நிலத்தில் அழுந்தியிருக்க, முதுகு எலும்பை நேராக நிலை நிலை நிறுத்தி அமர்ந்திருக்கிறார் ஐயப்பன். இந்த யோகநிலையில் உடலை நிறுத்துவதற்கு யோகப்பட்டம் பயன்படுகிறது. மற்ற சீரப்பன் ஆல் திரா கோயிலில் சாஸ்தாவை வீராசனத்தில் தரிசிக்கலாம். இந்த திருக்கோலத்தில், சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும், மற்றொரு கால் மடித்தப்படியும் இருக்கும். மடித்த காலையும் இடுப்பையும், சேர்த்து கட்டப் பட்டிருக்கும் பட்டம் வீரப் பட்டம் எனப்படும். யோக பட்டம் பூண்டு இருப்பவரை சாதாரணமாக துணிகட்டி இருக்கிறார் என்பது போன்ற பதிவுகளை பதிவு செய்யும் போது அறிந்த குருமார்களிடம் கேட்டுத்தெரிந்து பதிவிட்டால் தவறான செய்திகள் பரவாமல் தடுக்கலாம். தெரியாத விஷயங்களை கேட்டுதெரிந்துகொள்வதில் தவறில்லை.